Editorial / 2019 ஜூன் 07 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது பதவிக்காலத்தை கடந்த வாரம் ஆம்பித்த பின்னர் அறிவிக்கப்பட்ட எட்டு அமைச்சரவை செயற்குழுக்களிலும், உள்நாட்டமைச்சரான அமித் ஷார் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஆறு அமைச்சரவை செயற்குழுக்களில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளதுடன், பாதுகாப்பமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு அமைச்சரவை செயற்குழுக்களில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, ஏழு அமைச்சரவை செயற்குழுக்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளதோடு, வர்த்தகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஐந்து அமைச்சரவை செயற்குழுக்களில் இடம்பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் உள்துறை அமைச்சராகவிருந்த ராஜ்நாத் சிங், பொருளாதார விவகாரங்கள், பாதுகாப்புக்கான அமைச்சரவை செயற்குழுக்களில் இடம்பெற்றுள்ளபோதும், கொள்கையை தீர்மானிக்கும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயற்குழுவில் இடம்பெற்றிருக்கவில்லை.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயற்குழுவில், அமித் ஷா, நுண், சிறிய, மத்திய கைத்தொழில் அமைச்சர் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், உள்ளூர் அபிவிருத்தி, விவாசாயம், விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர தோமர், சட்ட, நீதி, இலத்திரனியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பியூஷ் கோயல், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், உணவு பதப்படுத்தல் அமைச்சர் ஹர்சிமிராட் கெளர் படால், பாரிய தொழிற்துறை அமைச்சர் அர்விந்த் சவாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அந்தவகையில், குறித்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயற்குழுவானது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தாகப் பதவியேற்ற ராஜ்நாத் சிங்கை, பிரதமர் நரேந்திர மோடி இல்லாத நிலையில் உள்ளடக்காதது குறிப்பிடத்தக்கதாக நோக்கப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சரவை நியமனங்களுக்கான செயற்குழுவில், பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷா மாத்திரமே காணப்படுகின்றன.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago