2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

8 மணிநேரம் தான் ஆகிறது... மீண்டும் எச்சரித்த ட்ரம்ப்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது மேலும் 25% கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, கூடுதலாக இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படலாம் என்று சூசகமாகத் தெரிவித்து உள்ளார்.

ரஷ்ய எண்ணெயை வாங்கும் பிற நாடுகள் பல உள்ளன அந்த நாடுகள் மீது ஆக்சன் எடுக்காமல் இந்தியா மட்டுமே ஏன் தனியாக குறிவைக்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, டிரம்ப், 

"நான் அறிவித்து 8 மணிநேரம் தான் ஆகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள் இரண்டாம் நிலைத் தடைகள் அதிகம் வரப்போகின்றன" என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனா மீதும் இதே போன்ற கூடுதல் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க நிர்வாகம் யோசிப்பதாகவும் அவர் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட அபராதங்களைப் போலவே சீனா மீது கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, "நடக்கலாம். நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தது. நடக்கலாம்" என்று பதிலளித்தார்.

டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். 

ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமுலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X