Mayu / 2024 மே 13 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல்-காசா போர் கடந்த 7 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் சமீபத்தில் இஸ்ரேல் மீது காசா நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்பினை இஸ்ரேல் நிராகரித்தது.
மேலும் காசாவின் ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்தியது. பின்னர் தனது இராணுவத்தை களமிறக்கிய இஸ்ரேல் அங்கு தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், காசாவின் மையப்பகுதியான டெய்ர் அல்-பலாஹ் நகரில் இஸ்ரேல் ஒரு வைத்தியசாலையை உருவாக்கி வருகிறது. இது ரபா நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக அமைக்கப்படுகிறது. காசா மீது போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலால் உருவாக்கப்படும் 8-வது வைத்தியசாலை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
22 minute ago
31 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
41 minute ago
2 hours ago