Ilango Bharathy / 2022 நவம்பர் 29 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
காற்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் FIFA உலகக்கோப்பைத் தொடரானது கடந்த 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமானது.
டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.

அந்தவகையில் நேற்று முன்தினம் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது.
பரபரப்பாக ,இடம்பெற்ற இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அணி அபார வெற்றிபெற்றது.
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பெல்ஜியத்தில் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தியும் கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களைக் கைது செய்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025