2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

கிராமியப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்

Editorial   / 2017 மே 27 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சந்துன் கொடிதுவக்கு

கிராமியப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம், பன்னிப்பிட்டியவில்,நேற்று (26)  வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொழில்நுட்ப திணைக்களத்தால், பன்னிப்பிட்டியவின் பொல்வத்தயிலுள்ள விளையாட்டு விஞ்ஞான நிறுவகத்திலேயே,  இந்தப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.  

பிலியந்தல, மஹரகம, ஹோமாகம கல்வி வலயங்களைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலைப் பயிற்சியாளர்கள் உட்பட, மொத்தமாக 35 பேர், குறித்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டிருந்தனர்.   

கடந்த செவ்வாய்கிழமை (23) ஆரம்பித்த குறித்த பயிற்சி முகாமின் இறுதி நாளில், பன்னிப்பிட்டிய தர்மபால மகா வித்தியாலயம், கலல்கொட அக்ரமத்ய வித்தியாலயம், அராவ்வல தர்மபால மகா வித்தியாலயம், மஹரகம மத்திய மகா வித்தியாலயம், அராவ்வலயிலுள்ள வின்ஃபீல்ட் சர்வதேசப் பாடசாலை, மஹரகம ஜனாதிபதிக் கல்லூரி, நுகேகொட றோயல் நிறுவகத்தைப் பிரதிநிதித்துவப்படும், ஏறத்தாழ 275 சிறுவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.   

இந்தப் பயிற்சி முகாமை, இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தொழில்நுட்பப் பணிப்பாளர் சமிந்த ஸ்டெய்ன்வோல் வழிநடத்தியதுடன், அவருக்கு, சமன் பொகொடவத்த உதவி புரிந்திருந்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .