2021 ஜூலை 29, வியாழக்கிழமை

11 வருடங்களின் பின் பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

2011ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை  பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில்  பாடசாலை அதிபர் பு.புண்ணியமூர்த்தி தலைமையில்  நடைபெற்றது.

11 வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில்  முல்லை இல்லம் (பச்சை நிறம்) 240 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் மருதம்  இல்லம் (மஞ்சள் நிறம்) 208 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் நெய்தல் இல்லம் (நீல நிறம் ) 180 புள்ளிகளைப் பெற்று  மூன்றாமிடத்தையும் பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.சிவப்பிரகாசம் கல்முனை தமிழ்ப் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.தயாசீலன் உட்பட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

போட்டி நிகழ்வுகளை கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .