2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

திருமலை மரியாள் - மட்டு. சிசிலியா கல்லூரிகளுக்கிடையே கூடைப்பந்தாட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருமலை புனித மரியாள் கல்லூரியின் கல்லூரி தினத்தையொட்டி அக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள்  கல்லூரிக்கும் இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி இன்று வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.

புனித மரியாள் கல்லூரி 1862 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது. இவ்வருடம் 148 ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் புனித சிசிலிலயா பெண்கள் கல்லூரி 45 புள்ளிகளையும், புனித மரியாள் கல்லூரி 43 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார். வருடாந்தம் இப்போட்டித் தொடர் இரண்டு மாவட்டங்களிலும் மாறி மாறி நடத்தப்படும் என புனித மரியாள் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரி எம்.எப்.பவளராணி தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .