2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மன்னாரில் புதுவருட பிறப்பை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

புதுவருட பிறப்பை முன்னிட்டு மன்னாரில் படைத்தரப்பினர் பொது மக்களுடன் இணைந்து விளையாட்டு போட்டி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தொடர்ந்து 4 நாட்கள் இடம்பெறவுள்ள இப்போட்டியில் முதற்கட்டமாக கால்பந்து,  கிரிக்கெட்,  கரப்பந்து போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இப்போட்டிகளில் மன்னார் நகர தீவுப்பகுதிக்குள் நிலை கொண்டிருக்கும் 25வது கெமுனு வோர்ச் பட்டாலியனைச்சேர்நத் ஐந்து கழகங்கள் மோதுகின்றன.

இறுதி தினமான ஒன்பதாம் திகதி திறந்த போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம் எனவும் மன்னார் தீவுப்பகுதிக்கு பொறுப்பான 25வது கெமுனு வோர்ச் பட்டாலியனின் பொறுப்பதிகாரி மேஜர் சுஜிவ ஜெயசிங்க கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .