2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 2011ஆம் ஆண்டுக்கான சம்பியனாக ஹிரா இல்லம் 269 புள்ளிகளைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

ஹிரா இல்லம் ( மஞ்சள் நிறம் ) 269 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் மர்வா இல்லம் ( சிவப்பு நிறம் ) 211 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் சபா இல்லம் ( பச்சை நிறம் )163  புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் அறபா இல்லமும் ( நீலம் நிறம் ) 123 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்), கல்முனை கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் மற்றும் பாடசாலை அதிபர்கள், கல்வியதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .