2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்று கழகங்களின் சம்மேளனத்துகான சீருடை அறிமுகம்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எல்.எஸ். டீன்

அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத்துக்கான சீருடை அறிமுக நிகழ்வானது, அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்ஷார் கலந்து சீருடையை இளைஞர்களுக்கு வழங்கி வைத்தார். கௌரவ அதிதிகளாக, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. றுமைஸா,  அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் இளைஞர் கழகங்களின் சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .