சிவாணி ஸ்ரீ / 2019 ஜூலை 02 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 15,000,000 ரூபாய் செலவில் கொடக்கவெல பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, கொடக்கவெல பிரதேச சபைத் தலைவர் பியந்த விஜேயபண்டார, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனுர அழகியவன்ன, மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி, ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அருணகுமார உட்பட மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்படி மைதானமானது சகல வளங்களையும் கொண்டு அமைக்கப்பட உள்ளதுடன், இதன் அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் வரை கொடக்கவெல பிரதேச சபையின் கீழ் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை அனுமதி வழங்கியுள்ளது.
12 minute ago
21 minute ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
26 Apr 2026
26 Apr 2026