Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 ஜனவரி 22 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பாறுக் ஷிஹான்
அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டுத் திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. அத்துடன் கண்காட்சி போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு அதிதிகளாக கலந்து கொண்டோர் அதில் பங்கேற்று விளையாடினர்.
அத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய டென்னிஸ் திடல் அம்பாறை டி.எஸ் சேனநாயக்கா பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவர் இக்பால் பின் இஷாக்கின் பங்களிப்பின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மேலும் ஏழு பாடசாலைகளில் டென்னிஸ் மைதானங்கள் நிர்மாணிக்கும் பணிகள் எதிர்வரும் மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த டென்னிஸ் மைதானம் உருவாக்கப்படுவதன் நோக்கம் அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் 456 பாடசாலைகள் உள்ளன. ஆனால் அவற்றில் டென்னிஸ் மைதானங்கள் எதுவும் இல்லை. திகாமடுல்ல மாவட்டத்தில் இருந்து டென்னிஸ் வீரர்களை உருவாக்குதல். இந்த டென்னிஸ் வீரர்களை தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் 27.10.2022 அன்று டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரியில் டென்னிஸ் மைதானம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த புதிய டென்னிஸ் மைதானம் 02 மாதங்கள் 20 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதுடன் இந்த டென்னிஸ் மைதானத்தின் செலவு 58 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். மேலும் இந்த டென்னிஸ் மைதானம் நிர்மாணமானது டி.எஸ் சேனநாயக்க கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இந்த நிர்மாணத்திற்கு அம்பாறை வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இது தவிர டென்னிஸ் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான பணியாளர்களை இலங்கை இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் பங்களிப்புகளை வழங்கி இருந்தது. இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்பப் பங்களிப்பை இலங்கை இராணுவ டென்னிஸ் சங்கத்தின் பிரிகேடியர் பிரியங்கர விதானகே வழங்கினார்.அத்துடன் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் மற்றும் அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.என்.கே. திரு. தமயந்த விஜய ஸ்ரீ முன்னின்று வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago