Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 05 , பி.ப. 04:50 - 1 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு மூன்று தொடரில், கிளிநொச்சி இந்து இளைஞர் அணி, கிளிநொச்சி நியூஸ்ரார் அணியை வென்றதன் மூலம், அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்து இளைஞர் அணி, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஸ் 45, சஞ்சை 31, கீர்த்தன் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில், தினேஸ், சுதன் ஆகியோர் தலா 3, எட்வின், சாபிதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பாடிய நியூ ஸ்ரார் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து, 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 115 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், எட்வின் 49, ரேகன் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில், மயூரன் 4, தர்சன் 2, றொஸ்கோ, அகிலன், பார்த்தீபன் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, இந்து இளைஞர், யுனைட்டட், ப்ரிஸ், புதியபாரதி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
MJ.Tharsan Saturday, 05 August 2017 02:19 PM
Congratzzz guys
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago