2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியில் 21.1கிலோமீற்றர் போட்டி நிகழ்ச்சியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்நாயக்க முதலாம் இடத்தையும், இலங்கையைச் சேர்ந்த கலன விஜயவிக்ரம இரன்டாமிடத்தையும், ஜேர்மனியை சேர்ந்த மெதிஸ் அடம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவில் சுவிஸலாந்தைச் சேர்ந்த அலக்சான்டா பேகே முதலாம் இடத்தையும், நெதர்லாந்தைச் சேர்ந்த லியோனி இரன்டாமிடத்தையும், சுவிஸலாந்தைச் சேர்ந்த எலினா மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (10) அன்று பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் கோலாகலமாக இடம் பெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என சுமார் 350 பேர் கலந்து கொண்ட குறித்த மரதன் ஓட்டப்போட்டியின் 21.1கிலோமீற்றர் அரை மரதன், 10கிலோமீற்றர் மற்றும் 5 கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.

 இதன்போது இடம்பெற்ற 10 கிலோமீற்றர் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.எரந்த தென்னகோன் முதலாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த நிகோல் ரெட்லி முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர், இயல் மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் நசீல், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.மாபிர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நித்தின் ரணவக்க, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எப்.உவைஸ் உட்பட பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த மரதன் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது. அறுகம்பே அரை மரதன் போட்டியினை அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் 7வது தடவையாக நடாத்திய மை குறிப்பிடத்தக்கது.

றியாஸ் ஆதம், ஏ.எல்.எம்.சினாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .