Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 24 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்று வரும் வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய இரு மாணவிகள் ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.பி. எம். ஜெ சீன் தெரிவித்தார்.
கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 11 ல் கல்வி பயிலும் ஆர்.ரீஹா 18 வயதின் கீழ் ஈட்டி எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டியிலும், தரம் 12 ல் கல்வி பயிலும் எம்.எப். நப்ரினா 20 வயதின் கீழ் ஈட்டி எறிதல் போட்டியிலும் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களான எஸ். ஐ.எம்.அம்ஜத், எம்.அஹ்சப் ஆகிய இருவருக்கும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
எம்.யூ.எம்.சனூன்
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago