Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்

தமது வைர விழாவை முன்னிட்டு கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.
கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகத்தை வென்றே இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இப்போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்று 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தநிலையில், பெனால்டியில் 4-2 என்ற ரீதியில் வென்றே இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இப்போட்டியின் நாயகனாக, இமையாணன் மத்தி விளையாட்டுக் கழகத்தின் சுலக்ஸன் தெரிவானார்.
9 minute ago
12 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
22 minute ago