2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இறுதிப் போட்டியில் பிளையிங்க் ஹோர்ஸ், ஹொலி ஹீரோஸ்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 28 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

சமூக சேவையாளரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலில் நாபீர் பவுண்டேசன் அனுசரணையுடன் சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தால் சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்படும் உதுமான் கண்டு ஞாபகார்த்த கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு சாய்ந்தமருந்து பிளையிங்க் ஹோர்ஸ், ஹொலி ஹீரோஸ் ஆகியன தகுதி பெற்றுள்ளன.

இத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், சாய்ந்தமருது பீமா விளையாட்டுக் கழகத்தை வென்று பிளையிங்க் ஹோர்ஸ் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்று ஹொலி ஹீரோஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடரின் இறுதிப் போட்டியானது அடுத்த மாத முற்பகுதியில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .