2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை அணியில் 2 திருமலை வீராங்கனைகள்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜெயரட்ணம்

இந்தியாவின் புது டெல்லியில்  நடைபெற்ற உள்ள 64ஆவது சுப்ரோடோ கிண்ண சர்வதேச கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்ளும் 17 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் கால்பந்தாட்ட அணி சார்பில் திருக்கோணமலை சென். மேரிஸ் கல்லூரி மாணவிகளான ஆர். ரிகாஸ்னி, கிருசாந்தன் யுவிஸா இவ்வணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தின் வழிகாட்டலில் முகாமையாளராக டீ.எம்.எம். திஸாநாயக்க தலைமையில் பிரதான பயிற்றுவிப்பளார் சமில சம்பத் வீரசிங்க உட்பட நாடளாவிய ரீதியில் 16 வீராங்கனைகள் மேற்படி அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் வீதம் எட்டு பிரிவுகளில் மொத்தம் 31 அணிகள் போட்டியிட உள்ளன. பீ பிரிவில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று லக்ஷ்ச தீவு அணியுடனும், வியாழக்கிழமை (21) சத்திஷ்கர் அணியுடனும்,  வெள்ளிக்கிழமை (22) பிரபல அசாம் அணியுடனும் மோத உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X