Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 மார்ச் 10 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்லம் எஸ். மௌலானா, அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை சதுரங்க சம்மேளனம் தேசிய ரீதியில் நடாத்திய சதுரங்கத் தொடரில், Pro Knights Chess Academy சார்பாக பங்குபற்றிய கல்முனை சாஹிரா கல்லூரி மாணவன் ஐ.கே. முஹம்மட் ஆக்கில் கான் அடுத்த சுற்றான பி பிரிவில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொலநறுவை றோயல் கல்லூரியில் கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்ற இப்போட்டி ஏழு சுற்றுக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
வயது வரையறைகள் இன்றி ஆண்களுக்குத் தனியாக நடாத்தப்பட்ட இப்போட்டித் தொடரில் சுமார் 40 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் பல சர்வதேச தரப்படுத்தல் போட்டியாளர்களுடனும் விளையாடியே இவர் அடுத்த சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.
இத்தொடருக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் வீரரான இவரை Pro Knight Chess Academy பணிப்பாளர் ஸாக்கீர் அஹமட் பயிற்றுவித்திருந்தார்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago