Shanmugan Murugavel / 2021 நவம்பர் 29 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் இளைஞர் விவகார விளையாட்டுதுறை அமைச்சால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கழக வீர வீராங்கனைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வு, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே. பிரபாகரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட குழு மற்றும் சுவட்டு நிகழச்சி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 15 கழகங்களைச் சேர்ந்த சுமார் 65 வீர, வீராங்கனைகள் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் 33ஆவது தேசிய மட்ட கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள திருக்கோவில் பிரதேச பெண்கள் கிரிகெட் கழக வீராங்கனைகளுக்கான சீருடை மற்றும் காலணிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இருந்ததுடன், நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். அனோஜா, மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ. முபாரக் அலி மற்றும் நன்கொடையாளர், விளையாட்டுதுறை பயிற்றுப்விப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
7 minute ago
13 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
16 minute ago