Janu / 2023 ஜூலை 10 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை இஸ்லாமாபாத் விளையாட்டு கழகம் நடத்திய ரீ 20 கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டியில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகம் பலப்பரீட்சை ஈடுபட்டது.
நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் அணியினர் முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் அணியினர் 18 பந்துவீச்சு ஓவர்களில் 148 ஒட்டங்களை பெற்றிருந்தனர்.
நிந்தவூர் இம்ரான் அணி சார்பாக பந்துவீச்சில் முஹம்மட் றிஸ்னி 3 விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்ரான் அணியினர் 17 பந்துவீச்சு ஓவர்களில் 7 விக்கட்டினை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.
நிந்தவூர் இம்ரான் அணி சார்பாக அதுகூடிய ஓட்டமாக நிஸ்கி அஹமட் 75 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார். இறுதி போட்டியின் சிறப்பாட்டக்காரராக நிந்தவூர் இம்ரான் அணியைச் சேர்ந்த நிஸ்கி அஹமட் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago