2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

உதயசூரியனை வீழ்த்திய இளந்தென்றல்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு ஆறு பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட துடுப்பாட்டச் சுற்றுத்தொடர் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (27)இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்து கொண்டார்.

குறித்த இறுதிப் போட்டியானது எட்டுப் பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்றது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கரிப்பட்டமுறிப்பு உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி எட்டுப் பத்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 05 இலக்குகளை இழந்து 73 ஒட்டங்களைப் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அளம்பில் இளந்தென்றல் அணியினர் 7 பந்துப் பரிமாற்றங்களில் 03 இலக்குகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி கிண்ணத்தை தம் வசமாகி கொண்டது.

இந் நிகழ்வில் தொடர்ந்து விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றதுடன், இறுதிப் போட்டியில் மோதிய அணிகளுக்கான வெற்றி கிண்ணங்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .