2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

S.Renuka   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் நாளை வியாழக்கிழமை (01)  நடைபெறும் மே தின பேரணிகளுக்காக  சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

முக்கிய பேரணி இடங்களில் காலி முகத்திடல், ஹைட் பார்க், விஹாரமஹாதேவி மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவை அடங்கும்.

எனவே, வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .