2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

எலைட் பனல் மத்தியஸ்தராக கல்முனை ஏ.எம். ஜப்ரான்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் எலைட் பனல் மத்தியஸ்தராக கல்முனையின் ஏ.எம். ஜப்ரான் தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

சம்மேளனத்தின் மத்தியஸ்தர் அகடமி குழாமில் 2018ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கான தொடர் பயிற்சியை மலேசியாவில் பூர்த்தி செய்ததோடு அகடமியால்  நடாத்தப்பட்ட தொடரில் சிறப்பாக மத்தியஸ்தர் கடமையை  வகித்ததால் ஜப்ரான் எலைட் பனல் மத்தியஸ்தராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் உடற்கல்வித்துறை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் ஜப்ரான், கல்லூரியின் பழைய மாணவருமாவார்.

தெற்காசிய கால்பந்தாட்டத் தொடருக்கு மத்தியஸ்தராக கலந்துகொள்வதற்காக தற்போது  நேபாளத்துக்கு சனிக்கிழமை (17) பயணமாகியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X