Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 25 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராட் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் நடாலுடன் இணைந்து ஆடிய கடைசி ஆட்டத்துடன் ஜாம்பவான் ரோஜர் பெடரர் விடை பெற்றாா்.
கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டின் பிக் த்ரீ என ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் மூவரும் இணைந்து 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி உள்ளனர். சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரைச் சோ்ந்த பெடரர் மிகவும் நளினமான ஆட்டத்துக்கும், புல்தரை மைதானத்தின் புலி எனவும் அழைக்கப்படுபவர்.
20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெடரர், மூட்டு காயம் காரணமாக கடந்த 2021 விம்பிள்டன் போட்டி காலிறுதிக்கு பின் ஆடவில்லை.
உடல்தகுதி சீரடையாத நிலையில் 41 வயதான பெடரர் கடந்த வாரம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ராட்லேவர் கோப்பை போட்டி இரட்டையர் பிரிவில் ஐரோப்பிய அணியில் தனது நீண்டகால எதிராளி நடாலுடன் இணைந்து உலக அணியின் பிரான்ஸஸ் டியாஃபோ-ஜேக் சாக் ஆகியோருடன் மோதினார்.
இதில் முதல் போட்டியை 4-6 என இழந்த நிலையில், இரண்டாவது போட்டியில் போராடி 7-6 என நடால்-பெடரர் இணை கைப்பற்றியது. எனினும் மூன்றாவது போட்டி நீண்டு கொண்டே சென்ற நிலையில் 11-9 என டியாஃபோ-ஜேக் இணை வென்றது.
தனது கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், டென்னிஸ் அரங்கில் இருந்து பிரியா விடை பெற்றார் ஜாம்பவான்.அப்போது அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது.
இதுதொடா்பாக பெடரர் கூறியதாவது: எப்படியும் முடிவுக்கு வர வேண்டும். மிகவும் சிறந்த நாளாக இது இருந்தது. எனக்கு வருத்தமாக இல்லை. எனது ஷூ லேஸ்களை மீண்டும் கட்ட முடிந்தது பெருமையாக இருந்தது. ரபேல் நடாலுடன் இணைந்து ஆடியது சிறப்பாக அமைந்தது. விடை பெறுவதால் எந்த அழுத்தமும் இல்லை: என்றார். அத்துடன், ஜாம்பவான்கள், வீரர்கள், நண்பர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago