2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி சம்பியன்

R.Tharaniya   / 2025 ஜூன் 30 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி Young Players (யங் பிளயர்ஸ்) விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கற்பிட்டி மண்டலக்குடா பவர் சேர்ஜ் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இரண்டு நாட்களாக மின்னொளியில் இடம்பெற்று வந்த விலகல் முறையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் நான்கு இடங்களை பெற்ற சம்மட்டிவாடி கரப்பந்தாட்ட அணி, கண்டக்குழி லைமாஸ் அணி, கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி மற்றும் கற்பிட்டி யங் பிளயர்ஸ் அணி என்பன அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் முதல் அரையிறுதியில் கற்பிட்டி யங் பிளயர்ஸ் அணியை 2 - 0 அடிப்படையில் கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இரண்டாவது அரை இறுதியில் சம்மட்டிவாடி அணியினரை 2 - 1 என்ற கணக்கில் கண்டக்குழி லைமாஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மிகவும் பலம் பொருந்திய கற்பிட்டி பவர் சேர்ஜ் அணியும் கண்டக்குழி லைமாஸ் அணியும் மிகவும் பரபரப்பாகவும் உற்சாகத்துடனும் கடும் போட்டியாக காணப்பட்ட இறுதிப் போட்டியில் கண்டக்குழி லைமாஸ் அணியை 2 - 1 என்ற கணக்கில் கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது கொண்டது.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X