Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 04 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர்
கல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூப்பந்தாட்டத் தொடரானது, கல்முனை வின்னர்ஸின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான ஆசிரியர் யூ.எல்.எம். ஹிலாலின் தலைமையில் வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
15 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று வயதுப் பிரிவு ஜோடிக்குழுவினருக்கு இடையில் நடைபெற்ற இத்தொடரில் 15 வயதுக்குட்பட்டோர் வகுப்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 18 ஜோடிகள் மோதியதில் மூன்றாமிடத்தை ஆதில்- றபீஸ் ஜோடியும், இரண்டாமிடத்தை ஷராஃப் - அன்சாப் ஜோடியும் பெற்றுக் கொண்டதுடன் அந்த வகுப்பு பிரிவின் சம்பியன் பட்டத்தை அஹனாப் - மிஜ்வத் ஜோடி தட்டிச் சென்றது.
17 வயதுக்குட்பட்டோர் வகுப்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஜோடிகள் மோதியதில் இரண்டாமிடத்தை டீ. யுகேசன் - கே. விபிஷன் ஜோடி பெற்றுக் கொண்டதுடன், அந்த வகுப்பு பிரிவின் சம்பியன் பட்டத்தை ஸஹ்ஸத் - அப்தி ஜோடி தட்டிச் சென்றது.
மேலும் 17 வயதுக்கு மேற்பட்டோர் வகுப்பில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஜோடிகள் மோதியதில் இரண்டாமிடத்தை இம்ஸான் - சஸ்பி ஜோடி பெற்றுக் கொண்டதுடன், அந்த வகுப்பு பிரிவின் சம்பியன் பட்டத்தை ஆதில் - நிப்ராஸ் ஜோடி தட்டிச்சென்றது.
இத்தொடரில், விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் கௌரவ அதிதியாக கலந்துகொண்டதுடன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஷன் அக்தர், கல்முனை முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எம். நஸீர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.பி.எம். இர்ஷாத், சாஹிரா தேசிய கல்லூரி அதிபர், அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை, அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர், அல்- அஸ்ஹர் வித்தியாலய அதிபர் உட்பட சாய்ந்தமருது கிரிக்கட் சங்க பிரதிநிதிகள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸால்ல் வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையத்தின் மேம்பாட்டுக்கான நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
10 minute ago
10 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
22 minute ago
36 minute ago