Editorial / 2026 மார்ச் 17 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், காபுலில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ரஷித் கான் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று (16) மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதலை பாகிஸ்தான் இராணுவமே நடத்தியதாக தலிபான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதத் தளங்களை மட்டுமே தாக்கியதாகவும், மருத்துவமனைகளை இலக்கு வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ரஷித் கான், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள இந்தக் கொடூரமான செயல் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இதற்கு காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் துணையாக நிற்கிறேன். நாம் இந்தக் காயங்களிலிருந்து குணமடைந்து, ஒரு தேசமாக மீண்டும் எழுவோம். இன்ஷா அல்லாஹ்!"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago