Shanmugan Murugavel / 2021 ஜூலை 30 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப். முபாரக்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் விளையாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. நாளை கொண்டாடப்பட்வுள்ள இலங்கைத் திருநாட்டின் விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் முன்னால் விளையாட்டு உடற்பயிற்சிகள் இடம்பெற்றன.

தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு விளையாட்டுகள் நிகழ்வுகள் நடைபெற்றன. விளையாட்டுத் தினம் தொடர்பிலும் போசனை கூறுகளின் அவசியம் குறித்தும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியாக அலுவலர் உடற்பயிற்சிகளில் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
இலங்கைக்கு முதலாவது ஒலிம்பிக் பதக்கம் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க நாள் ஜூலை 31ஆம் திகதி ஆகும்.

1948 ஆம் ஆண்டு, (31-07-1948) ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு, மேஜர் தேசமான்ய டங்கன் வைட் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .