2025 நவம்பர் 19, புதன்கிழமை

குண்டு போடுதலில் திருமலை மாணவன் முதலாமிடம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்  

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகள் வியாழக்கிழமை (8) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இப்போட்டி  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12.10.2015)வரை தொடர்ந்து 5 தினங்கள் நடைபெற உள்ளது.

நேற்று(8) நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில்; திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் அமிர்தகுலசிங்கம் கோகுலன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

இவர் 2013ம் வருடம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் மூன்றாம் இடத்தையும், 2014ம் வருடம் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடததையும் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X