Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 03 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

பாடசாலைகளுக்கிடையிலான 18 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்தாட்டத் தொடரில் கிண்ணியா அல்-அமீன் பாடசாலை சம்பியனானது.
அநுராதபுரம் பண்டுகாபய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே கிண்ணியா அல்-அமீன் சம்பியனானது.

இதேவேளை மூன்றாமிடத்தை புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் மகா வித்தியாலயம் பெற்றது. இதற்காக உழைத்த பிரதி அதிபர் ஏ.ஜே.எம். இனூஸ் ஆசிரியர்களான என்.எம். ஜெசீம், எம்.ஆர்.எம். ஜாபீர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எச்.என். அம்லக் மொஹமட் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக வித்தியாலய அதிபர் ஏ.ஜே.எம். இல்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வட மேல் மாகாணத்தில் இரண்டு வயதுப் பிரிவுகளில் பங்குபற்றிய ஒரே ஒரு பாடசாலை வெட்டாளை அசன் குத்தூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago