2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனாக தெரிவாகிய குளக்கோட்டன்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/குளக்கோட்டன் பாடசாலை மாணவர்கள் வலைப் பந்தாட்ட போட்டியில்  வரலாற்றுச் சாதனை படைத்து மாகாண மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மையை அடுத்து கௌரவிப்பு வீதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (12) அன்று இடம் பெற்றது. 

இவ்வருட மாகாண மட்ட வலைப்பந்தாட்ட போட்டிகளில் (18 வயது கீழ்  ) குளக்கோட்டன் பாடசாலை அணி சம்பியனாக  தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து குறித்த வீதி ஊர்வலம் இடம் பெற்றது.

மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வெற்றி வாகை சூடிய  மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக முள்ளியடி சிவத்த பாலத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி தம்பலகாமம் சுவாமிமலை பிள்ளையார் ஆலயம் வரை சென்று பின்னர் குளக்கோட்டன் பாடசாலை வந்தடைந்தது.இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எச் ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .