Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
குணசேகரன் சுரேன் / 2019 மே 29 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் கரவெட்டி பிரதேச செயலகம் சம்பியனானது.
கல்வியங்காடு ஸ்ரீ ஞானபாஸ்கரா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலகத்தை வென்றே கரவெட்டி பிரதேச செயலகம் சம்பியனானது.
10 ஓவர்கள் கொண்ட இத்தொடரில்முதலில் துடுப்பெடுத்தாடிய கரவெட்டி பிரதேச செயலகம், 10 ஓவர்களில் 74 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அனுரதன் 28, கோகுலன் 11 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு, 75 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய உடுவில் பிரதேச செயலகம், 10 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago