Shanmugan Murugavel / 2022 ஜூலை 13 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்

அமரர் நாகேந்திரன் வெற்றிக் கிண்ணத் தொடரில் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
வருடாவருடம் அமரர் நாகேந்திரனது குடும்பத்தினரால் நடாத்தப்படும் இந்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் தொடரின் துறைநீலாவணை மத்திய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு எவகிறீன் விளையாட்டுக் கழகத்தை வென்றே சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற எவகிறீன் விளையாட்டுக் கழகம், முதலில் துடுப்பெடுத்தாடிய ஐந்து ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 42 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 43 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கெனடி 2.5 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.
சம்பியனான கெனடிக்கு 40,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாமிடத்தைப் பெற்ற எவகிறீனுக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும், மூன்றாமிடத்தைப் பெற்ற துறைநீலாவணை லயன் ஸ்டார் கிரிக்கெட் அணியினருக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
நான்காமிடத்தைப் பெற்ற மட்டக்களப்பு ஜோன் றீமிக்கிஸ் கிரிக்கெட் அணியினருக்கு 5,000 ரூபாய் பணப்பரிசுடன், தொடரின் நாயகனாக டிலு தெரிவுசெய்யப்பட்டு 5,000 ரூபாய் பணப்பரிசும் கிண்ணமும், இறுதிப் போட்டியின் நாயகனாக ஹரி தெரிவுசெய்யப்பட்டு 3,000 ரூபாய் பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.
அதிக ஓட்டங்களை குவித்த வினோதனுக்கு பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டதுடன், இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இரண்டு அணியினருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது.
கடந்த ஒருமாத காலமாக மின்னொளியில் இடம்பெற்று வந்த இத்தொடரில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 79 அணிகள் பங்குபற்றியிருந்தன.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025