2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது செம்மலை உதயசூரியன்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 19 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கால்பந்தாட்ட லீக்கால் நடத்தப்பட்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் செம்மலை உதயசூரியன் சம்பியனானது.

20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், முல்லைத்தீவு நகரிலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கள்ளப்பாடு உதயத்தை வென்றே உதயசூரியன் சம்பியனானது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் பெனால்டியில் 3-2 என்ற ரீதியிலேயே உதயசூரியன் வென்றிருந்தது.

இறுதிப் போட்டியின் நாயகனாக உதயசூரியனின் கு. டிசாந்தும், தொடரின் நாயகனாக உதயத்தின் எஸ். புகழேந்தியும், சிறந்த கோல் காப்பாளராக உதயசூரியனின் வி. சாருஜனும், சிறந்த பின்கள வீரராக உதயத்தின் ரீ. மதுசனும் தெரிவாகினர்.

 

இத்தொடரில் இரண்டாமிடத்தைப் பெற்ற உதயத்துக்கு 20,000 ரூபாய் பணப் பரிசிலும், வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பியனான உதயசூரியனுக்கு 35,000 ரூபாய் பணப் பரிசிலும் வெற்றிக் கிண்ணமும்  வழங்கி வைக்கப்பட்டது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X