Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நெஸ்ட் இன்டர்நஷனல் ப்ரைவேட் லிமிடெட்டின் அனுசரணையில் நடைபெற்ற சிறந்த நீலங்களின் சவால் சமர் கிண்ணத் தொடரில் சாய்ந்தமருது பிளையிங்க் ஹோஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே பிளையிங்க் ஹோஸ் சம்பியனானது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய லெஜன்ஸ், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 123 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங்க் ஹோஸ், 16.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக பிளையிங்க் ஹோஸின் எஸ்.எம். ஸுஜான் தெரிவானார்.
சம்பியனான பிளையிங்க் ஹோஸுக்கு கிண்ணத்துடன் 60,000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாமிடம் பெற்ற லெஜன்ஸுக்கு 30,000 ரூபாய் பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது.
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
1 hours ago