Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபு அலா
உலக சிறுவர் தினத்தையொட்டி கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
நடாத்தப்பட்ட சிறுவர்களுக்கான மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் திருகோணமலை
சம்பியனானது.

திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இத்தொடரில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ்
இயங்கும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பராமரிப்பு
நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்கள் பங்குபற்றினர்.
மாவட்ட ரீதியாக நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் தொடர்களில் தெரிவாகியவர்களை மாகாண
மட்டத்தில் கலந்துகொள்ள வைக்கும் நோக்கில் இடம்பெற்ற இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 3
அணியினரும், பெண்கள் பிரிவில் 3 அணியினரும் பங்குபற்றினர்.
அணிக்கு 11 பேர் கொண்ட இத்தொடரானது, 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக
அமைந்தது. இதில் திருகோணமலை மாவட்ட ஆண்கள் அணியினர் வெற்றிபெற்றனர். பெண்கள்
அணியில் மூன்று மாவட்ட அணியினரும் கூட்டு வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025