2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனான புத்தளம் ஜுவனைல் விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 09 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற  அணிக்கு ஏழு பேரைக் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில் புத்தளம் ஜுவனைல் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. 

புத்தளம் ஜே.எச். கட்டடக் கலை நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்றன.

விலகல் அடிப்படையில் நடைபெற்ற இத்தொடரில், 2-0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டியில் ஜெல்ஸி அணியை வென்றே ஜுவனைல் அணி சம்பியனாயிருந்தது.

ஜுவனைல் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் முஹம்மது நசீம் பெற்றிருந்தார்.

சிறந்த வீரராக ஜுவனைல் அணியின் முஹம்மது நசீமும், சிறந்த கோல் காப்பாளராக அதே அணியின் கோல் காப்பாளர் எம். பரோஜும் தெரிவாகினர்.

ஜுவனைலுக்கு 20,000 ரூபாய் ரொக்கப்பணமும், இரண்டாமிடம் பெற்ற ஜெல்ஸி அணிக்கு 10,000 ரூபாய் ரொக்கப்பணமும் பரிசுத் தொகையாக வழங்கி வைக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .