Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத் சம்பியனானார்.
மாலபே ராகுல பெண்கள் பாடசாலையில் சனிக்கிழமை (12) முதல் திங்கட்கிழமை (14) வரை நடைபெற்ற இப்போட்டியில் மிஜ்வாத் முதலாமவராக விளையாடி தான் கலந்து கொண்ட ஆறு போட்டிகளில் 5.5 புள்ளிகளைப் பெற்று (5 வெற்றிகள், 1 சமநிலை) சம்பியனாகியுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்து தயார்படுத்தி அழைத்துச் சென்ற கல்லூரியின் சதுரங்கப் பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.சுஹ்தான் மற்றும் கல்லூரியின் சதுரங்க பொறுப்பாசிரியர் எம்.வை.எம். றகீப் ஆகியோருக்கும் அதிபர் எம்.ஐ. ஜாபிர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
39 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
57 minute ago