Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
கட்டாரிலுள்ள உத்தியோகபூர்வ சர்வதேச கிளை அமைப்பான சஹீரியன்ஸ் கட்டார் புத்தளம் அமைப்பானது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் நடாத்திய புட்சால் கால்பந்தாட்ட இரண்டாம் சுற்றுக்கான தொடர் அண்மையில் கட்டார் கேம்பிரிட்ஜ் கல்லூரி வளாகத்தில் கட்டார் நாட்டின் கொவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது.
இத்தொடரின் மூலம் புத்தளம் சஹீரியன்ஸ்களை மீள ஒன்றிணைக்கும் செயற்திட்டமானது கட்டார் வாழ் பழைய மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இத்தொடரில் பல்வேறுபட்ட பழைய மாணவர் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 அணிகள் பங்குபற்றின. இறுதிப் போட்டிக்கு ஆர்.வை.டீ 05 அணியும், லைட் வெட்டரன் அணியும் தெரிவாகின.
இறுதிப் போட்டியில் லைட் வெட்டரன் அணி 1-0 கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது. இத்தொடரில் மூன்றாமிடத்தை இஸட் டட்ஸ் அணி பெற்றுக் கொண்டது.
இத்தொடரின் சிறந்த கோல் காப்பாளராக முஹம்மது சராபும், தொடரின் நாயகனாக ஏ.ஓ.எம். ஹம்தியாஸும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .