Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச இராணுவ விளையாட்டு போட்டித்தொடரில் பங்கேற்க இலங்கை விமானப்படை குத்துச்சண்டை விளையாட்டு வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
58ஆவது சர்வதேச இராணுவ விளையாட்டு போட்டித்தொடரில் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இலங்கை விமானப்படை வீராங்கனைகள் நால்வர் மற்றும் சர்வதேச குத்துச்சண்டை நடுவர்களில் ஒருவரான இலங்கை விமானப்படையை சேர்ந்த ஸ்கொற்றன் ளீடர் பிரசாத் விஜேசிங்க ஆகியோர் ரஷ்யாவில் உள்ள மோஸ்வ் நகருக்கு நாளை (16) புறப்படவுள்ளனர்
அவர்களுக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த போட்டிகளில் பங்குபெற உள்ள விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனை சமோதி பஸ்யால, 57கிலோ பிரிவில் 2019 லேடன் கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், 2019 தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்,2019 மற்றும் 2018 ஆண்டுக்கான குத்துச்சண்டை போட்டிகளிலும் வெற்றியாளர் ஆவர்.
மேலும் 60 கிலோ குத்துச்சண்டை போட்டிப்பிரிவில் விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனை சஜிவணி குரே பாதுகாப்பு சேவைகள் குத்துசண்டை போட்டி 2018 மற்றும் 2019 தாய்லாந்தில் இடம்பெற்ற திறந்த குத்துசண்டை போட்டிகளிலும் 2019 ஆசிய குத்துசன்டை போட்டிகளும் வெற்றிபெற்றவர்.
விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனை கஸ்மி திவாங்கா 69 கிலோ குத்துசண்டை பிரிவில் பாதுகாப்பு சேவைகள் குத்துசண்டை போட்டி 2018 ம் ஆண்டுக்கான லேடன் கோப்பை குத்துச்சண்டை 2019ம் ஆண்டுக்கான கிளிபேட் கிண்ண குத்துசண்டை போட்டிகள் 2018 மற்றும் 2019 ஆண்டுக்கான தேசிய குத்துச்சன்டை போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றியாளர்.
மற்றும் ஒரு வீராங்கனையான விமானப்படை சிரேஷ்ட படைவீராங்கனையான கயனி களுஆராச்சி 75கிலோ பிரிவில் பாதுகாப்பு சேவைகள் குத்துசண்டை போட்டி
2018 ம் ஆண்டுக்கான லேடன் கோப்பை குத்துச்சண்டை , 2019ம் ஆண்டுக்கான கிளிபேட் கிண்ண குத்துசண்டைஆகிய போட்டிகளில் வெற்றியாளர் ஆவர்.
இந்த நான்கு வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அனுபவங்களுடன் இந்த போட்டித்தொடரில் பங்குபற்றியுள்ளனர்.
விமானப்படை குத்துச்சண்டை பிரிவின் தலைவராக குரூப் கேப்டன் இந்திக விக்கிரமசிங்க, செயலாளராக விங் கமாண்டர் விராஜ் கமகே , பிரதான பயிற்சியாலாளராக சிரேஷ்ட வான்படை வீரர் தனுஷ்க ஆரியரத்ன ஆகியோர் செயற்படுகின்றனர்.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago