2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சாஹிரா அதிபருடன் ஸ்போர்ட்ஸ் குழுவினர் சந்திப்பு

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜீமுடன் பழைய மாணவர் சங்கச் செயலாளரும், சாஹிரா ஸ்போர்ட்ஸ் குழுவின் அங்கத்தவருமான ஏ.டபில்யூ.எம்.நஸீப் மற்றும் இதர சாஹிரா ஸ்போர்ட்ஸ் குழு உறுப்பினர்கள் புத்தளம் "வில்பத்து கேட்" உணவகத்தில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். 

இதில், சாஹிரா ஸ்போர்ட்ஸின் கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசி இணக்கமான முடிவுகளை எட்டியதோடு இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் அதிபர் உறுதியளித்தார். 

இதனையடுத்து சாஹிரா ஸ்போர்ட்ஸின் உத்தியோகபூர்வ சீருடை அதிபருக்கு கையளிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X