2025 ஜூலை 05, சனிக்கிழமை

சான்றிதல் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற அங்கத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், மடு, மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கிற்கான அங்கத்துவ சான்றிதழை அதன் தலைவர் வைத்திய கலாநிதி ம.மதுரநாயகம் பெற்றுக்கொண்டார்.

மடு, மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கானது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

மடு,மாந்தை மேற்கு பிரதேசத்திலுள்ள உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்களினதும் ஆர்வலர்களினதும் நீண்டகால தேவையாகவிருந்த உதைபந்தாட்ட லீக்கானது ஆரம்பிக்கப்பட்டு, அது செயற்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த நிலையில், இம்மாதம் 05 திகதி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது.

லீக்கானது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டதனால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற்று லீக்கையும் தமது லீக்கிலுள்ள விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறனையும்  மேலும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .