Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவுக்கான இடம்பெறும் இணைய வாக்கெடுப்பில் யாழ்ப்;பாணப் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் முதலிடம் பெற்றுள்ளார்.
ஞானரூபனுக்காக 5481 பேர் வாக்களித்தனர். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக hவவி:ஃஃளிழசவள.அழசயளிசைவை.உழஅஃஎழவந.pரி?சநகஸ்ரீ2சூ_ஸ்ரீ_என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இணைய வாக்கெடுப்பின் கடைசி திகதி 10 திகதி புதன்கிழமை என அறிவிக்கப்பட்டது.
முகப்புத்தகம் வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த வாக்கைச் செலுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
வாக்கெடுப்பு தொடங்கிய நாளிலிருந்து முதலிடம் வகித்த ஞானரூபன், இறுதியில் சிறந்த நட்சத்திரமாக வெற்றிபெற்றார்.
இளவாலையைச் சேர்ந்த ஞானரூபன், தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இருக்கும் ஒரேயொரு தமிழ் வீரன் ஆவார்.
அநுராதபுரம் சொட்லி கழகம் இவரை ஒப்பந்தம் செய்து தங்கள் அணியில் விளையாடசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்ததாக 3198 வாக்குகளை பெற்று, மொறட்டுவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த றக்பி வீரன் ஹேஸன் சில்வா இரண்டாமிடத்திலும் கொழும்புப் பல்கலைக்கழக நீச்சல் வீரன் சமீர சுலோச்சன விதானஹே 1609 வாக்குகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
8 hours ago