2025 நவம்பர் 19, புதன்கிழமை

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி வியாழக்கிழமை (28) கல்லூரி மைதானத்தில் அதிபர் திருமதி ல.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இல்ல மெய்வன்மைப் போட்டியில் 322 புள்ளிகள் பெற்ற கலைமகள் இல்லம் முதலிடத்தையும் 309 புள்ளிகள் பெற்ற பூமகள் இல்லம் இரண்டாமிடத்தையும் 280 புள்ளிகள் பெற்ற மலைமகள் இல்லம் மூன்றாமிடத்தையும் 272 புள்ளிகள் பெற்ற திருமகள் இல்லம் நான்காமிடத்தையும் பெற்றன.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட இளம் தொழிலதிபர் த.ஜெயந்தன் ஆகியோர் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கான பரிசில்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X