Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

டயலொக் இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு இருபதுக்கு – 20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, இலங்கை கிரிக்கெட் சபையின் சிவப்பு அணி தகுதி பெற்றுள்ளது.
பல்லேகலவில் நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் பச்சை அணியுடனான போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு சிவப்பு அணி தகுதி பெற்றுள்ளது.
மழை காரணமாக குறித்த போட்டியானது 15 ஓவர்கள் கொண்டதாகவே இடம்பெற்றிருந்த நிலையில், மூன்று பந்துகள் இருக்கத் தக்க நிலையில் ஆறு விக்கெட்டுகளால் சிவப்பு வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சிவப்பு
பச்சை: 114/7 (15 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமிந்த பெர்ணான்டோ 37 (36), பதும் நிஸங்க 22 (13), சம்மு அஷான் 10 (08), ரமேஷ் மென்டிஸ் 06 (01) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 0/15 [3], அகில தனஞ்சய 0/10 [2], ஹிமேஷ் ராமநாயக்க 1/13 [2], சந்துஷ் குணதிலக 0/7 [1], அசேல குணரத்ன 1/16 [2], சீக்குகே பிரசன்னா 1/21 [2])
சிவப்பு: 118/4 (14.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 40 (32), அவிஷ்க பெர்ணான்டோ 38 (25), அசேல குணரத்ன ஆ.இ 14 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: லக்ஷன் சந்தகான் 2/14 [3], சுமிந்த லக்ஷன் 1/19 [3], ரமேஷ் மென்டிஸ் 1/22 [3], அஷான் பிரியஞ்சன் 0/10 [1])
இந்நிலையில், பல்லேகலவில் நாளை இரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் சபையில் சாம்பல் அணியை சிவப்பு எதிர்கொள்கின்றது.
28 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
45 minute ago