2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தங்கம் வென்ற இந்துகாதேவிக்கான கௌரவிப்பு நிகழ்வு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்

இந்துகாதேவிக்கான கௌரவிப்பு நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது

இந்துகாதேவியை கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றை ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு புதிய நகர் புதிய சூரியன் விளையாட்டு மைதானத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் புதிய சூரியன் விளையாட்டு கழகம் என்பன இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதனும், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் நா. குகேந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்துகாதேவியின் வீட்டில் இருந்து  உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானம் வரை அவர் மற்றும் அவருடைய தாயார், அம்மம்மா, அம்மப்பா மற்றும் விருந்தினர்கள் கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்ளி பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து தனது திறமையை வெளிக்காட்டிய மாணவிக்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளையும் வழங்கி கௌரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .