Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ. சக்தி
தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 7ஆவது பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நிகழ்வுகள், கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கிராமத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒன்றிணைத்து Batti Boys, Z. Lion, Green Guys, Golden Flower, Kennedy என ஐந்து அணிகளாகப் பிரிந்து பலப்பரீட்சை நடத்தினர். இதில் இறுதிப் போட்டியில் Green Guys-ஐ வென்று Kennedy சம்பியனானது.
இறுதிப் போட்டியின் நாயகனாக கு. புவிப்பிரகாஸும், சிறந்த துடுப்பாட்ட வீரராக லோ. ஜெகதீஸும், தொடரின் நாயகனாக லோ. ஜெகனும் தெரிவாகினர்.
பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கியிருந்தார். அத்தோடு குறித் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் திருமதி சுகன்யா அனோஜன்பிரகாஸ் உள்ளிட்ட கிராம தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago