2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேசிய அணிக்கு தெரிவான வீராங்கனைகளும், பயிற்றுவிப்பாளரும் கௌரவிப்பு

Shanmugan Murugavel   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு. தமிழ்ச்செல்வன்


இலங்கை தேசிய  கபடி அணிக்கு தெரிவு செய்யப்பட்ட
வீராங்கனைகளும்,பயிற்றுநர் பரஞ்சோதி அவர்களும் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

றோட்டறிக் கழக உறுப்பினரும் கொடைவள்ளலுமான எஸ்.கே நாதனின் நிதி
அனுசரணையில் கிளிநொச்சி நகர றோட்டறி கழகத் தலைவர் ஜெயசுந்தர தலைமையில் கரடிப்போக்கிலுள்ள றோட்டறி நிலையத்தில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. கழகத்தின் தொடக்க தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கடந்த கால தலைவர்கள், கழகத்தின் அடுத்த ஆண்டு தலைவர் வண. பிதா.ஜோசுவா உறுப்பினர்கள் கலந்து வீராங்கனைகளை வாழ்த்தி கௌரவித்தனர்.



முதல் கட்டமாக வீராங்கனைகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது,
தொடர்ந்தும் இவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் கழகம்
முன்வந்துள்ளது, அத்தோடு மூவருக்குமான ஒரு வருடத்துக்குரிய சத்துணவை
வழங்கும் ஏற்பாட்டை கழகமூடாக வைத்தியர் சத்தியமூர்த்தி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X