2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘தேசிய அணி செல்லாததற்கு றொட்றிகோ, சிறு குழுவே காரணம்’

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 03 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்கேற்க முடியாமல் போனதற்கு றொட்றிகோ மற்றும் ஒரு சிலரின் சதியே   காரணம் என கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த உமர், “இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஒரு   அரசியல்வாதி இருப்பதாகவும், தனது மகன் இந்த அணியில் இடம்பெிடிக்காதததால், றொட்றிகோவுடன் இணைந்து இந்த சதியை செய்துள்ளனர். சர்வதேச தடை ஒன்று விதிக்கப்பட்டால் அற்கான பொறுப்பை முதலில் ரஞ்சித் றொட்றிகோ தான் ஏற்க வேண்டும்.

வரலாற்றில் முதற் தடவையாக 17 வயதுக்குட்பட்ட தெற்காசியத் தொடரை இலங்கையில் நடத்த என்னால் முடிந்தது. அந்த சிறப்பான தொடரை நடத்தியதை பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு இரசிகர்கள் பாராட்டினர். இதைத் தாங்க முடியாதவர்கள் சிலர் இருந்தனர்.

அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சரை ஏமாற்றும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை கால்பந்தாட்டத்துக்கு இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க முயன்றனர்.

17 வயதுக்குட்பட்ட தேசிய அணி சிறப்பாக தயாராகி இருந்ததோடு, ஆசியக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது” எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .